சனி, 17 ஆகஸ்ட், 2013

சூனியமும் மறைவான ஞானமும்




சொர்க்கம், நரகம் போன்றவற்றை நம்புவது எப்படி மறைவான ஞானமோ அது போல சூனியம் செய்தல், கராமத் (அற்புதங்கள்) செய்தல் போன்றவையும் மறைவான ஞானமே ! 
ஏனெனில், ஒருவர் மீது எந்த சாதனமுமின்றி ஒன்றை ஒருவர் ஏவுகிறார் என்றால் அதனால் ஏற்படும் பாதிப்பை அறிந்து ஏவுகிறார் என்று பொருளாகிறது. 

இங்கிருந்து கொண்டு லண்டனில் வசிக்கும் ஒருவரை நோக்கி சில கெடுதல்களை ஒருவர் ஏவுகிறார் என்றால், அதனால் அந்த மனிதருக்கு எந்த பாதிப்புகள் ஏற்படும் என்பதை இவர் அறிகிறார் என்று அர்த்தம். அத்தகைய ஆற்றல் மறைவான ஆற்றலே தவிர வேறில்லை.

இத்தகைய ஆற்றலை பற்றி அல்லாஹ் சொல்கிறான் என்று பாருங்கள்..

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் 'உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?' என்று கேட்பான். 'எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர்கள் கூறுவார்கள்.
5:109

நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! 7:188

மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். 3:179

அதாவது, மறைவானவை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அதை எவருக்கேனும் அல்லாஹ் அறிய தருவான் என்றால் அது அவன் தேர்வு செய்த தூதர்களுக்கு தான்.
இதை 3:179 வசனம் நேரடி வாசகங்களை கொண்டு தெள்ளதெளிவாக கூறுகிறது.

ஆக இந்த அளவுகோலின் படியும் சூனியம் பொய் என்று நிரூபிக்கலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக